கடலூர் மாவட்டம் வேப்பூர் அடுத்துள்ள மாளிகைமேடு கிராமத்தை சேர்ந்த அன்பழகன் நித்தியா தம்பதியினர் இவர்களுக்கு திருமணம் ஆகி ஆறு வருடங்கள் ஆகிறது.
இந்நிலையில் நித்யாவிற்கும் அன்பழகனுக்கும் வாய் தகராறு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து தகராறு முற்றிய நிலையில் கிராமத்தின் அருகாமையில் உள்ள கிணற்றில் நித்தியா 5 வயது மகன் அனீஸ் மற்றும் 2 வயது மகள் கோபிகா என்ற இரண்டு பிள்ளைகளோடு குதித்து தற்கொலை செய்து கொண்டார்.
இதையறிந்த கிராம மக்கள் சம்வபயிடத்திற்கு விரைந்து மூன்று பேரின் உடலை சடலமாக மீட்டுள்ளனர். இறந்தவர்களின் உடலை ஆம்புலன்ஸ் மூலமாக அங்கிருந்து பிரேத பரிசோதனைக்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இந்த சம்பவம் குறித்து வேப்பூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.