விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு என தனி ரசிகர்கள் கூட்டமே உள்ளது. மிகவும் பரபரப்பாக ஒளிபரப்பாகி வந்த பிக்பாஸ் சீசன் 6 நிகழ்ச்சி நேற்றுடன் முடிவடைந்தது.
விக்ரமன் வெற்றி பெறுவார் என பலரும் எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அசீம் விக்ரமனின் வெற்றி வாய்ப்பை தட்டிச் சென்றது பலரையும் அதிர்ச்சி அடைய செய்தது.
அசீம் டைட்டில் வின்னராக அறிவிக்கப்பட்டதாக கூறப்படும் நிலையில் சமூக வலைதளங்களில் மக்கள் நாயகன் அசீம் என்ற ஹேஷ்டேக் டிரெண்டாகிவருகிறது. மற்றொரு பக்கம் தொகுப்பாளர் கமல்ஹாசனால் பலமுறை கண்டிக்கப்பட்ட ஒரு நபர் எப்படி பிக்பாஸ் வின்னராக அறிவிக்கப்படலாம் எதிர்ப்பும் கிளம்பி வருகின்றன.
இது ஒரு பக்கம் இருக்க பிக்பாஸ் நிகழ்ச்சியில் நடிகர் கமல்ஹாசனின் உடை குறித்து கமெண்ட்ஸ் தெரிவித்து வருகின்றனர். அதாவது காக்கா எச்சம் போன டிசைனில் ஒரு சட்டை பேண்ட்டைக் கமல் அணிந்திருக்கிறார் என கூறி வருகின்றனர்.


