சென்னை கடற்கரை – செங்கல்பட்டு இடையே நாளை மின்சார ரயில்கள் ரத்து!

பரமரிப்புப் காரணமாக நாளை (அக்.27) சென்னை கடற்கரை – செங்கல்பட்டு இடையே இயக்கப்படும் மின்சார ரயில்கள் ரத்து செய்யபடுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:

சென்னை கடற்கரை பணிமனையில் பராமரிப்புப் பணிகள் நடைபெறுவதால் நாளை (ஞாயிற்றுக்கிழமை) மின்சார ரயில் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

அதன்படி, சென்னை கடற்கரை-செங்கல்பட்டு இடையே இயக்கப்படும் அனைத்து மின்சார ரயில்களும் நாளை அதிகாலை 4 மணி முதல் மாலை 5 மணி வரை ரத்து செய்யப்படுகிறது.

பயணிகளின் வசதிக்காக சென்னை பூங்கா ரயில் நிலையத்தில் இருந்து அதிகாலை 5 மணி முதல் தாம்பரம் வழியாக செங்கல்பட்டுக்கு 23 சிறப்பு ரயில்கள் 20 நிமிட இடைவெளியில் இயக்கப்படும்.

சென்னை பூங்காவில் இருந்து 14 சிறப்பு ரயில்கள் தாம்பரத்திற்கு இயக்கப்படும். அதேபோன்று, செங்கல்பட்டில் இருந்து அதிகாலை 4 மணியில் இருந்து 30 நிமிட இடைவெளியில் பூங்கா ரயில் நிலையத்திற்கு 25 சிறப்பு ரயில்கள் இயக்கப்படும்.

தாம்பரத்தில் இருந்து அதிகாலை 3.55 மணியில் இருந்து 30 நிமிட இடைவெளியில் சென்னை பூங்கா ரயில் நிலையத்திற்கு 13 சிறப்பு ரயில்கள் இயக்கப்படும்.

மாலை 5 மணிக்குப் பிறகு ஞாயிறு அட்டவணைப்படி ரயில்கள் இயங்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

RELATED ARTICLES

Recent News