டாக்டர் அன்புமணி ராமதாஸிற்கு தேர்தல் ஆணையம் அங்கீகாரம்..!!

டாக்டர் அன்புமணி ராமதாஸிற்கு தேர்தல் ஆணையம் அங்கீகாரம் அளித்ததை முன்னிட்டு ஈரோட்டில் பாமகவினர் பட்டாசுகள் வெடித்து, இனிப்புகள் வழங்கி கொண்டாடினர்

டாக்டர் அன்புமணி ராமதாஸ் தலைமையிலான பாமகவிற்கு மாம்பழ சின்னம் ஒதுக்கீடு செய்யப்பட்டு தேர்தல் ஆணையம் அங்கீகாரம் வழங்கி உள்ளது.

இந்த அறிவிப்பு வெளியானதை தொடர்ந்து ஈரோட்டில் பாட்டாளி மக்கள் கட்சியின் மாவட்ட செயலாளர் ராஜு தலைமையில் அக்கட்சியினர் பேருந்து நிலையத்திற்குள் கொடிகளுடன் பேரணியாக வந்து பட்டாசுகள் வெடித்து இனிப்புகள் வழங்கினர்.

தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த ,பாமக மாவட்ட செயலாளர் எஸ்.ஆர். ராஜு,

” டாக்டர் அன்புமணி ராமதாஸ் தான் உண்மையான பாமகவின் தலைவர் என்றும்

தேர்தல் ஆணையம் அங்கீகாரம் அளித்திருப்பது தங்களுக்கு மகிழ்ச்சி அளிக்கிறது.
தாங்கள் இனி புதிய உத்வேகத்துடன் செயல்படுவோம் என்றும் கூறினார் .
இந்த நிகழ்ச்சியில் பாமகவின் மாநில மாவட்ட நிர்வாகிகள் பலரும் கலந்து கொண்டனர்.

RELATED ARTICLES

Recent News