மன அழுத்தம் குறைவதற்கும், உடலை பேணிக் காப்பதற்கும் விளையாட்டு முக்கியம் – கோவையில் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி பேச்சு…
கோவையில் அதிமுக சார்பில் கிரிக்கெட் வீரர்களுக்கு கிரிக்கெட் உபகரணங்கள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி கலந்துகொண்டு உபகரணங்களை வழங்கினார். தொடர்ந்து மேடையில் பேசிய அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி,
இன்றைக்கு தமிழகத்தில் விளையாட்டு ஒரு முக்கியமான அங்கமாக விளங்குகின்றது. உடல் கட்டுடன் எதிர்பார்க்கும் மன அழுத்தம் குறைவதற்கும் உடலை பேணிக் காப்பதற்கும் விளையாட்டு முக்கியம். விளையாட்டு வீரர்கள் எவ்வளவு சோதனைகள் வந்தாலும் அதை எதிர்கொள்ளக்கூடிய மனநிலையில் உள்ளவர்கள் தான் விளையாட்டு வீரர்கள் அந்த அளவிற்கு விளையாட்டினை ஈடுபாடு கொண்டு முழு கவனம் செலுத்த வேண்டும் .
அதிமுக அரசு இருக்கின்ற போது கிராமம் முதல் நகரம் வரை எல்லா கிராமங்களிலும் எந்த இளைஞர்களுக்கு விளையாட்டு மைதானம் அமைக்க வேண்டும், அதற்கு உபகரணம் வழங்க வேண்டும் என்று அடிப்படையில் நாங்கள் செயல்படுத்தினோம். இளைஞர்கள் தங்கள் பகுதியில் இருக்கின்ற விளையாட்டு மைதானத்தை பயன்படுத்தி தங்களை தயார் படுத்திக் கொண்டிருந்தார்கள். அதிமுக ஆட்சி இருக்கின்ற போதுதான் விளையாட்டு வீரர்களுக்கு அரசு சார்ந்த நிறுவனங்களில் வேலை வாய்ப்பு கிடைக்கும் வகையில் மூன்று சதவீதம் இட ஒதுக்கீடு செய்தது அதிமுக அரசு .
விளையாட்டு வீரர்களை ஊக்குவிக்கும் விதமாக அதிமுக ஆட்சியில் இருக்கின்ற போதுதான் முதல்வர் கோப்பைக்கான அறிவிப்பை வெளியிட்டு ஆங்காங்கே விளையாட்டு போட்டிகள் நடத்தப்பட்டு முதல்வர் கோப்பைகள் வழங்கப்பட்டது.
நம்முடைய விளையாட்டு வீரர்களை திறமையானவர்களாக சர்வதேச அளவில் விளையாட்டு வீரர்களை தயார் படுத்துகின்ற விதமாக விளையாட்டு விடுதிகள் கட்டிக் கொடுத்தோம். அதுமட்டுமல்லாமல் ஊட்டச்சத்தின் தொகை மூன்று மடங்கு உயர்த்தி கொடுத்தோம்.கலந்து கொண்டு வெற்றி பெற்ற விளையாட்டு வீரர்களுக்கு ஊக்கத்தொகை உயர்த்திக் கொடுத்த அரசாங்கம் அதிமுக அரசாங்கம். அதுமட்டுமல்லாமல் அந்த சர்வதேச போட்டியில் விளையாடி வெற்றி பெற்றவர்களுக்கு பயிற்சி கொடுக்கின்ற பயிற்சியாளர்களுக்கும் நாங்கள் உதவித்தொகை கொடுத்தோம்.
இன்றைக்கு அதிமுக கழகத்தில் சகோதரர் எஸ்பி. வேலுமணி குறிப்பிட்டது போல நம்முடைய இளைஞர்களுக்கு விளையாட்டு போட்டிகளில் கிராமம் முதல் நகரம் வரை ஈடுபடுகின்றவர்களுக்கு முழுமையான வசதி கொடுக்கின்ற விதமாக ஏற்கனவே தொடங்கப்பட்ட திட்டத்தை மீண்டும் தொடங்குவோம். கிராமம் முதல் நகரம் வரை இந்த விளையாட்டு வீரர்களுக்கு அந்த பகுதியில் எந்த விளையாட்டு ஆர்வமாக இருக்கிறார்களோ அந்த வீரர்களுக்கு உபகரணங்களை நாங்கள் கொடுப்போம். ஆனால் இந்த அரசாங்கம் அதை நிறுத்தி உள்ளது. எங்கள் அரசாங்கம் வந்த பிறகு தொடர்ந்து கொடுக்கப்படும்.
எஸ் பி வேலுமணி அவர்கள் மூன்று மாவட்டத்தில் இருக்கின்ற கோவை திருப்பூர் நீலகிரி மூன்று மாவட்டத்தில் இருக்கின்ற இளைஞர்களை ஊக்குவிக்கின்ற வகையில் இந்த விளையாட்டு வீரர்களுக்கு உபகரணங்கள் வழங்குகின்ற விழா சிறப்பாக இங்கே ஏற்பாடு செய்த அவருக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன் என தெரிவித்தார்.