“தமிழகத்தை மீட்போம்” பிரச்சாரத்தை தொடங்கினார் எடப்பாடி பழனிசாமி..!!

விவசாயிகள் பல பிரச்சனைகள் குறித்து கூறினார்கள். நானும் ஒரு விவசாயி தான். விவசாயிகளின் பிரச்சனைகள் அனைத்தும் எனக்கு தெரியும். விவசாயம் கடினமான பணி அதில் ஈடுபட்டவர்களுக்கு தான் அது தெரியும் எனவே தான் என்னை எதுவும் செய்ய முடியவில்லை. தாய் தனது பிள்ளைகளை பராமரிப்பது போல விவசாயிகள் பயிர்களை பராமரித்து வருகிறார்கள்.

விவசாயிகளுக்கு அ.தி.மு.க ஆட்சியில் ஏராளமான திட்டங்கள் கொண்டு வரப்பட்டது. தமிழகத்தில் உள்ள 14,000 ஏரிகளில் 6290 ஏரி குளங்களை கொடிமராமத்து திட்டத்தின் மூலம் தூர்வாரி நடவடிக்கை எடுத்தோம். வண்டல் மண்களை விவசாயிகளை எடுத்து இயற்கை விவசாயத்துக்கு பயன்படுத்த குறிப்பிட்ட அடி கிடைக்க அனுமதி அளிக்கப்பட்டது.

இதனால் கோடை காலத்தில் நிலத்தடி நீர் சேர்க்கப்பட்டு விவசாயிகள் பயன்படுத்தினார்கள். அதேபோன்று உள்ளாட்சி துறை மூலம் 26,000 பேரை குளங்கள் தூர்வாரினோம். ஆனால் அதன் பிறகு திமுக ஆட்சியில் அவை கிடப்பில் போடப்பட்டது. நான் பொதுப் பணித் துறை அமைச்சராக இருந்த போது அப்போது முதலமைச்சராக இருந்த ஜெயலலிதா மூலம் அத்திக்கடவு அவிநாசி திட்டத்தை நிறைவேற்ற பூர்வாங்க பணிகள் தொடங்கப்பட்டது.

விவசாயிகளின் 50 வருட கோரிக்கையை நிறைவேற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டது. அங்கே உள்ள அணையில் இருந்து தண்ணீரை தேக்கி வைத்து எடுக்க வேண்டும் என்பதால் அந்த திட்டத்திற்கு முதலில் 15 வருடம் ஆகும் என்று கூறினார்கள். எனவே அதற்கு மாற்று திட்டம் தயார் செய்தோம்.

அதிகாரிகள் பலமுறை ஓய்வு பெற்று விடுவார்கள் என்பதால் ஓய்வு பெற்ற அதிகாரிகள் மூலம் அதற்கு தனி குழு அமைக்கப்பட்டு திட்டம் தயாரிக்கப்பட்டது. அன்னூர் உள்ளிட்ட விவசாயிகள் தங்களுக்கும் அந்த தண்ணீர் வேண்டுமென்று கூறினார்கள் எனவே அத்திக்கடவு அவிநாசி திட்டம் இரண்டாவது கட்டத்தை நிறைவேற்ற ஆயிரம் கோடி ரூபாய் ஒதுக்கி இருந்த நிலையில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டு விட்டது.

கால்நடை விவசாயிகளுக்காக சேலத்தில் கால்நடை மருத்துவக் கல்லூரி அமைக்கவும் ஆராய்ச்சி மையம் அமைக்கவும் ஆயிரம் கோடியில் கள்ளக்குறிச்சியில் ஆராய்ச்சி மையம் திட்டம் தொடங்கினோம். இதன் மூலம் வெளிநாட்டு பசு உடன் உள்நாட்டு பசு கலப்பினம் செய்யப்பட்டு உருவாக்கப்படும். இதன் மூலம் குறைந்த அளவில் பால் கொடுக்கும் பசுவில் இருந்து மாறி ஒரு பசு 40 லிட்டர் பால் வரை கொடுக்கும் அளவிற்கு. நடவடிக்கை எடுக்கப்பட்டது.

அதேபோன்று ஆடு முயல் பன்றி கோழி வளர்ச்சிக்காகவும் அந்த ஆராய்ச்சி மையம் ஏற்படுத்தப்பட்டது. ஆனால் அதையும் தி.மு.க ஆட்சி அமைத்ததும் கிடப்பில் போட்டு விட்டார்கள். விவசாயிகள் இரட்டிப்பு லாபம் ஏற்படும் அளவிற்கு அ.தி.மு.க ஆட்சியில் நடவடிக்கை எடுத்தோம். கால்நடைகளுக்கு ஏற்படும் நோயை ஆரம்பத்திலேயே கண்டுபிடிக்க அந்த ஆராய்ச்சி மையம் ஏற்படுத்தப்பட்டது. அவற்றை எல்லாம் விவசாயிகள் சென்று பார்க்க வேண்டும்.

அதேபோன்று விவசாயிகளுக்கு அ.தி.மு.க ஆட்சியில் மும்முனை மின்சாரம் கொடுத்தோம். வண்டல் மண் 40 யூனிட் வரை இலவசம் என்று கூறினோம் என்று அவற்றை மாற்றி விட்டார்கள். அதேபோன்று வனவிலங்குகள் விவசாயிகள் பாதிக்கப்படுவதை தடுக்க நான் முதலமைச்சராக இருந்த போது அகழிகள் ஏற்படுத்தப்பட்டது. காட்டு விலங்குகளால் பாதிக்கப்படும் விவசாயிகளுக்கு பயிர் இழப்பீட்டுத் தொகை வழங்க நடவடிக்கை எடுத்தோம் காப்பீட்டு திட்டம் மூலம் உதவி செய்தோம் விவசாயிகளுக்கு 2428 கோடி வறட்சி நிதி கொடுத்த ஒரே ஆட்சி அதிமுக ஆட்சி தான்.

விவசாயிகள் உற்பத்தி செய்யும் காய், கறிகளுக்கு உரிய விலை கிடைக்க செய்தோம்
இங்கே விவசாயிகள் வைத்த கோரிக்கைகள் அனைத்தும் அ.தி.மு.க ஆட்சி அமைந்ததும் நிறைவேற்றப்படும் நதிநீர் மாசுபடுவதை தடுக்க பவானிசாகர் அமராவதி நொய்யல் 4 ஆறுகள் நேரில் மாசு கலக்காமல் தடுக்கவும் அதை சுத்தம் செய்து விவசாயத்திற்கும் குடிநீருக்கும் பயன்படுத்த வகையில் நடவடிக்கை எடுக்கப்படும்

அப்போது பிரதமரிடம் இது தொடர்பாக பேசி நடந்தாய் வாழி காவிரி திட்டத்தை நிறைவேற்ற வேண்டும் என்று கூறினோம், அது ஜனாதிபதி உரையிலும் இடம்பெற்றது இப்போது அந்த திட்டத்திற்கு 11 ஆயிரத்து 500 கோடி நிதி ஒதுக்கீடு செய்து உள்ளார்கள். இது அ.தி.மு.க ஆட்சியின் சாதனை. அதேபோன்று கடலில் கலக்கும் தண்ணீரை வீணாவதை தடுக்க நடவடிக்கை எடுக்கப்படுகிறோம்.

அதேபோன்று செங்கல் சூளை உற்பத்தியாளர்கள் தொழில் நலிவு அடைந்து விட்டது என்று கூறினார்கள். அ.தி.மு.க ஆட்சி அமைந்ததும் அவர்கள் கோரிக்கை அனைத்தும் பரிசளிக்கப்பட்டு நடவடிக்கை எடுக்கப்படும். தி.மு.க ஆட்சியில் நான்கு முறை மின்சார கட்டணத்தை உயர்த்தி விட்டார்கள். அ.தி.மு.க ஆட்சியில் தோழாளர்களுக்கு பசுமை வீடு திட்டம் கொண்டு வந்து பத்தாயிரம் வீடுகள் கட்டித் தரப்பட்டது. கைத்தறி துணி விற்காத போது அதற்கு 150 கோடி மானியம் கொடுத்தோம்.

கேரளாவில் இருந்து தண்ணீர் கிடைக்க கேரளா முதலமைச்சர் மற்றும் அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி திட்டம் நிறைவேற்ற நடவடிக்கை எடுத்தோம். அ.தி.மு.க ஆட்சி அமைந்ததும் கேரளா தண்ணீரை கொண்டு வருவதற்கு அ.தி.மு.க நிச்சயம் நடவடிக்கை எடுப்போம் விவசாயிகளின் கோரிக்கை அனைத்தும் நிறைவேற்றப்படும் இவ்வாறு அவர் பேசினார்.

RELATED ARTICLES

Recent News