சென்னையில் கடந்த சில தினகங்களாக தொழிலதிபர் வீடுகளில் அமலாக்கத்துறை அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தி வருகின்றனர்..
சென்னை வேளச்சேரி, அடையாறு, மேற்கு மாம்பலம் உள்ளிட்ட இடங்களில் தொழிலதிபர்களின் வீடுகளில் அமலாக்கத்துறை அதிகாரிகள் குழுவாக சோதனை நடத்தி வருகின்றனர். குறிப்பாக, வேளச்சேரி குல்மோகர் அவென்யூவில் வசித்து வரும் தொழிலதிபர்களின் இல்லத்திலும் அமலாக்கத்துறை சோதனை நடைபெற்று வருகிறது.
இவர், நாட்டின் பல்வேறு விமான நிலையங்களில் கட்டுமான பணிகளில் ஈடுபட்டு வரும் நிறுவனம் ஒன்றை நடத்தி வருகிறார். அமீத்பிஸ்னாய் மற்றும் தொடர்புடைய சில நிறுவனங்கள் மீது சட்டவிரோத பண பரிமாற்றம் (illegal money transactions) தொடர்பாக குற்றச்சாட்டு எழுந்ததைத் தொடர்ந்து, அமலாக்கத்துறை இன்று அதிகாலை முதல் சோதனைகள் நடத்தி வருகின்றனர்..
தொழிலதிபர்களின் வீடுகளில் ஒரே நேரத்தில் நடக்கும் இந்த சோதனையில் அமலாக்கத்துறை அதிகாரிகள் தேவையான ஆவணங்கள் மற்றும் கணக்குப் பதிவுகளை ஆய்வு செய்து நடவடிக்கை மேற்கொள்ள திட்டம்..