ஆப்கானிஸ்தானில் ஏற்பட்ட அதிபயங்கர நிலநடுக்கம். மண்சரிவில் சிக்கி உயிரிழந்தோரின் எண்ணிக்கை 1,411ஆக அதிகரித்துள்ளது
ஆப்கானிஸ்தானில் உள்ள நங்கர்ஹார் மாநிலத்தின் பாகிஸ்தான் எல்லையோரப் பகுதியில் நேற்று அதிபயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.. இதன் ரிக்டர் அளவு 6.3ஆக பதிவாகியுள்ளது. மேலும் அப்பகுதியில் பலமுறை நில அதிர்வுகள் ஏற்ப்பட்டதாக அப்பகுதி மக்கள் வேதனை தெரிவித்தனர்.
இந்த நிலநடுக்கத்தை தொடர்ந்து குனார், லக்மான், நங்கர்ஹார் மற்றும் நூரிஸ்தான் ஆகிய 4 மாநிலங்களில் 1,100க்கும் மேற்பட்ட மக்கள் உயிரிழந்துள்ள நிலையில் இன்று உயிரிழந்தோரின் எண்ணிக்கை 1,411-ஆக அதிகரித்துள்ளது. 3,500க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்த நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இதனிடையே ஐ.நா அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில் 12 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில்., மீட்புப் பணிகள் தொடர்ந்து நடைபெற்றுவதாக ஐ.நா தெரிவித்துள்ளது.
மேலும் ஆப்கானிஸ்தானுக்கு தேவையான அனைத்து அவசர உதவிகளையும் இந்திய செய்துக்கொடுக்குமென வெளியுறவுத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.