ஹெலிகாப்டர் மீது மோதிய கழுகு…உயிர் தப்பிய காங்கிரஸ் தலைவர்..!

கர்நாடக மாநிலத்தில் காங்கிரஸ் தலைவர் டி கே சிவகுமார் சென்ற ஹெலிகாப்டர் மீது கழுகு மோதியதில் கண்ணாடிகள் உடைந்தது. இதையடுத்து ஹெலிகாப்டர் பத்திரமாக தரையிறக்கப்பட்டது.

இதில் காங்கிரஸ் தலைவர் டி கே சிவகுமார் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார். ஹெலிகாப்டரில் சிவகுமாருடன் இருந்த ஒருவருக்கு லேசான காயம் ஏற்பட்டுள்ளது.

கர்நாடகாவில் நடைபெறவுள்ள சட்டமன்ற தேர்தலுக்கான பிரச்சாரத்திற்காக டி கே சிவக்குமார் பெங்களூருவில் இருந்து முல்பாகல் நோக்கிச் சென்றபோது இந்தச் சம்பவம் நடந்துள்ளது.

RELATED ARTICLES

Recent News