ஷாருக்கான் நடிப்பில் ஜனவரி மாதம் வெளியான ‘பதான்’ முதல் நாளில் ரூ.57 கோடி வசூலித்தது. அதேபோல அட்லீ இயக்கத்தில் ஷாருக்கான் நடிப்பில் வெளியான ‘ஜவான்’ முதல் நாளில் ரூ.75 கோடியை வசூலித்து மிரட்டியது. இந்த இரண்டு படங்களும் ரூ.1,000 கோடி வசூல் செய்து சாதனை படைத்தது.
இந்நிலையில் ஷாருக்கான் நடித்த ‘டன்கி’ திரைப்படம் நேற்று வெளியானது. இப்படத்தை பாலிவுட்டின் முன்னணி இயக்குநரான ராஜ்குமார் ஹிரானி இயக்கியிருந்தார்.
‘டன்கி’ திரைப்படம் முதல் நாளில் ரூ.30 கோடி வசூலித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இது, இந்த ஆண்டு வெளியான ஷாருக்கானின் மற்ற படங்களைவிட குறைவான வசூல் என்பது குறிப்பிடத்தக்கது.