வட இந்தியாவில் பல்வேறு பகுதிகளில் ஒரு சிலர் பசுவின் சிறுநீரை குடிப்பதை வழக்கமாக வைத்துள்ளனர்.
மூட நமிக்கையின் பெயரில் பசுவின் சிறுநீர் உடலுக்கு நல்லது என்று அவர்கள் கருதுகின்றனர்.

இந்நிலையில், பசு, எருமை மாடுகளின் சிறுநீரை குடிப்பது மனிதர்களுக்கு தீக்கு விளைவிக்கும் என்ற தகவல் ஆய்வில் தெரியவந்துள்ளது. உத்தரபிரதேசம் மாநிலத்தில் இந்திய கால்நடை ஆராய்ச்சி நிறுவனம் சார்பில் ஆய்வு ஒன்று நடத்தப்பட்டது.
இந்த ஆய்வில் பசு, எருமை மாட்டின் சிறுநீரை மனிதர்கள் குடிப்பதால் உடலுக்கு தீக்கு ஏற்படுகிறது என்பது தெரியவந்துள்ளது.
பசு மற்றும் எருமை மாட்டின் சிறுநீரில் மனித உடலுக்கு தீங்கு விளைவிக்கக்கூடிய 14 வகையான பாக்டீரியாக்கள் இருப்பது தெரிய வந்துள்ளது. குறிப்பாக எருமை மாட்டின் சிறுநீரில் அதிகளவு பாக்டீரியாக்கள் உள்ளதாக ஆய்வில் தெரியவந்துள்ளது.