அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில், பிரதீப் ரங்கநாதன், அனுபமா பரமேஸ்வரன், மிஷ்கின், கௌதம் மேனன் என்று பல்வேறு தரப்பினர் முக்கிய வேடத்தில் நடித்துள்ள திரைப்படம் டிராகன்.
கடந்த மாதம் ரிலீஸ் ஆன இந்த திரைப்படம், முதல் நாளில் இருந்தே நல்ல விமர்சனங்களை ரசிகர்கள் மத்தியில் பெற்று வருகிறது. குறிப்பாக, குடும்ப ரசிகர்கள் மத்தியில், இந்த திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.
இந்நிலையில், இந்த திரைப்படத்தின் வசூல் நிலவரம் என்னவென்று தற்போது தெரியவந்துள்ளது. அதன்படி, உலகம் முழுவதும், 15 நாட்களில், 130 கோடி ரூபாயை இப்படம் வசூலித்துள்ளதாம்.
இதே வேகத்தில் வசூல் இருந்தால், இன்னும் சில நாட்களில், 150 கோடி ரூபாய் என்ற இமாலய இலக்கை, இந்த திரைப்படம் அடைந்துவிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.