தமிழ் சினிமாவில் லேடி சூப்பா் என அழைக்கப்படுவா்
நயன்தாரா. தற்போது, பல படங்களில் கமிட்டாகியுள்ள இவரின் அன்னபூரணி படம்
சமீபத்தில் வெளிவந்து நல்லதொரு வரவேற்பை பெற்று வருகிறது.
இப்படத்தின் ப்ரோமஷனுக்காக சமீபத்தில் பேட்டி ஒன்று கொடுத்துள்ளார் நயன்தாரா.இந்த பேட்டியில் நடிகை நயன்தாராவை லேடி சூப்பர்ஸ்டார் என தொகுப்பாளினி அர்ச்சனா அழைக்க, உடனடியாக ஷாக்கான நயன்தாரா, “என்னை அப்படி அழைக்காதீர்கள். அப்படி என்ன அடையாளப்படுத்தினால் நிறைய பேர் திட்டுறாங்க” என கூறினார்.
மேலும், 10 போ் பாராட்டினால் , 50 போ் திட்டுகிறார்கள் எனவும் என்னுடைய பயணமானது அதை நோக்கி இல்லை, ஆனால் இந்தப்பட்டம் அனைவரும் சோ்ந்து கொடுத்திருக்கும் அன்பை காட்டுகிறது,அதற்கு மிகவும் நன்றி எனக்கூறினார்.இவரின் இப்பதிலுக்கு பலரும் தங்களது கருத்தகளை பதிவிட்டு வருகின்றனா்.