செய்தியாளர் கேட்ட கேள்விக்கு பதில் அளிக்காமல் மௌனமாக சென்ற திமுக எம்பி கனிமொழி…!!

திண்டிவனத்தில் நகராட்சி பணியாளரை திமுக பெண் கவுன்சிலர் காலில் விழுந்து மன்னிப்பு கேட்க வைத்த சம்பவம் பற்றிய கேள்விக்கு கனிமொழி எம்பி பதிலளிக்காமல் சென்றார்..

தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் நகர் பகுதியில் அடிப்படை வசதிகள் மற்றும் மேம்படுத்துதல் குறித்த ஆலோசனைக் கூட்டம் கனிமொழி எம்பி தலைமையில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் அமைச்சர் அனிதா.ஆர். ராதா கிருஷ்ணன் மாவட்ட ஆட்சியர் இளம் பகவத் மற்றும் அனைத்து துறை அதிகாரிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர். இதனையடுத்து செய்தியாளர்களை சந்தித்தபோது கனிமொழி எம்பி தெரிவித்ததாவது…

கோவில் நகரமான திருச்செந்தூரில் அடிப்படை வசதிகளை மேம்படுத்துவது பக்தர்கள், பொது மக்களுக்கு தேவையான கூடுதல் வசதிகளை செய்து கொடுப்பது தொடர்பான அனைத்துதுறை அதிகாரிகளுடன் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. அதில் குறிப்பாக பாதாள சாக்கடை திட்டத்தை முழுமையாக நடைமுறைப்படுத்த ஆலோசிக்கப்பட்டது. மேலும் அடிப்படை வசதிகள் தொடர்பான பணிகள் விரைவில் தொடங்கப்படும் என தெரிவித்தார்.

திமுக கொடுத்த தேர்தல் வாக்குறுதிகளை 75 சதவீதம் முதல் 80 சதவீதம் நிறைவேற்றப்பட்டுள்ளது. சில வாக்குறுதிகள் பரிசீலனையில் உள்ளது.

திண்டிவனத்தில் நகராட்சியில் பணிபுரியும் பட்டியல் இன சமூகத்தைச் சேர்ந்த பணியாளரை திமுக பெண் கவுன்சிலர் காலில் விழுந்து மன்னிப்பு கேட்க வைத்த சம்பவம் குறித்து செய்தியாளர் கேட்ட கேள்விக்கு பதில் அளிக்காமல் மௌனமாக சென்றார்.

RELATED ARTICLES

Recent News