தஞ்சாவூர் மாவட்டம், திருவிடைமருதூர் வட்டம், நெய்குண்ணம் பிரதான சாலையைச் சேர்ந்தவர் நல்லதம்பி மகன் கலைவாணன் (30), இவர் திமுக இளைஞரணி துணை அமைப்பாளராக பதவி வகித்து வந்தார்.
இந்நிலையில் அவர் நேற்று இரவு தனது வயலுக்கு தண்ணீர் பாய்ச்சுவதற்காக வீட்டில் உள்ளவரிடம் கூறிவிட்டு சென்றுள்ளார். ஆனால் நீண்ட நேரம் ஆகியும் வீட்டுக்கு வராததால் சந்தேகம் அடைந்த அவரது உறவினர்கள் கலைவாணனை தேடி நள்ளிரவு வயலுக்குச் சென்றனர்.
அப்போது, வயலில் அவரை கொடூரமாக வெட்டி கொலை செய்யப்பட்டிருப்பது தெரியவந்தது.
அதிர்ச்சி அடைந்த அவரது உறவினர்கள் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
அண்மைக்காலமாக அந்த பகுதியில் இருதரப்பினருக்கும் முன் விரோதம் இருந்ததாகவும், அதனால் வெட்டி கொலை செய்திருக்கலாம் எனவும் கூறப்படுகிறது.
மேலும், ஜெயங்கொண்டம் திமுக எம்எல்ஏ கா.சோ.க. கண்ணன் சகோதரி மகன் கலைவாணன் என்பது குறிப்பிடத்தக்கது.