தனியார் பேருந்துகள் போட்டி போட்டு செல்வதில் தகராறு பயணிகள் அச்சம்..!

தஞ்சாவூரில் தனியார் பேருந்துகள் போட்டி போட்டு செல்வதில் தகராறு, டிரைவர்கள் ஒருவருக்கொருவர் தாக்குதல், பயணிகள் அச்சம்

தஞ்சாவூரில் தனியார் பேருந்துகளிடையே யார் முன்னே செல்வது என்று போட்டி போட்டுக் கொண்டு செல்வது வழக்கமாகி விட்டது,

இதையடுத்து தஞ்சாவூரில் இன்று கும்பகோணத்தில் இருந்து தஞ்சை வந்த இரண்டு தனியார் பேருந்துகள் முன்னும் பின்னும் செல்லும்போது அவர்களுக்குள் போட்டி ஏற்பட்டு தஞ்சை சரபோஜி கல்லூரி அருகில் செல்லும்போது இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு பஸ்சை நடுவழியிலேயே நிறுத்தி விட்டு ஒருவருக்கொருவர் தாக்கி கொண்டனர்,

பின்னர் அக்கம்பக்கத்தினர் வந்து அவர்களை சமாதானப்படுத்தியதும் பேருந்தை எடுத்துச் சென்றனர், இந்த சம்பவம் தொடர்ந்து நீடித்துக் கொண்டே வருகிறது, இதனால் பயணிகள் தொடர்ந்து அச்சமடைந்து வருகின்றனர்,

பேருந்து டிரைவர்கள் தாக்கிக் கொள்ளும் வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது, இது குறித்து காவல்துறையினர் மற்றும் போக்குவரத்து துறையினர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்

RELATED ARTICLES

Recent News