சென்னை பெருங்களத்தூரில் இருந்து தாம்பரம் நோக்கி வாகனங்கள் சாலையில் சென்று கொண்டிருந்தன. அப்பொழுது இரும்பூலியூர் அருகே செல்லும்போது முன்னாள் சென்ற காரை பின்னால் வந்த டெம்போ வேன் மோதியதாக கூறப்படுகிறது.
இதில் ஆத்திரம் அடைந்த கார் ஓட்டுநர் சாலையில் காரை நிறுத்தி விட்டு இறங்கி வேன் ஓட்டுனிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். அப்பொழுது வேனில் வந்தவருக்கும் கார் ஓட்டுனருக்கும் இடையேகைகலப்பாக மாறியது.
இந்த நிலையில் சாலையில் நடந்த சண்டையை பார்த்த இரும்பூலியூர் மார்க்கெட் பகுதியில் இருந்த நபர்கள் ஒன்று சேர்ந்து கார் ஓட்டுநரை தாக்கி உள்ளனர்.
கணவரை அடிப்பதைப் பார்த்த மனைவி ஓடிப் போய் தடுக்க முயன்ற போது மனைவி கண் முன்னே அவரது கணவரை சாலையில் தள்ளி கொடூரமாக தாக்கினர்.
இதை பார்த்த காரில் வந்த உறவினர்கள் மற்றும் கார் ஓட்டுநரின் மனைவி ஆகியோர் போராடி மீட்டு காரில் ஏற்றினர். தற்போது கார் ஓட்டுநரை கொடூரமாக தாக்கும் வீடியோ வெளியாகி பரப்பரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஏற்கனவே கடந்த சில மாதங்களுக்கு முன்பு பல்லாவரம் ஜிஎஸ்டி சாலையில் இது போன்று காரில் வந்த கணவரை மனைவி முன் தாக்கிய சம்பவம் நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.