டூரிஸ்ட் ஃபேமிலி இயக்குநருக்கு சர்ப்ரைஸ் தந்த ராஜமௌலி!

அபிஷன் ஜீவிந்த் இயக்கத்தில், சிம்ரன், சசிகுமார் ஆகியோர் முக்கிய வேடத்தில் நடித்த திரைப்படம் டூரிஸ்ட் ஃபேமிலி. கடந்த 1-ஆம் தேதி அன்று திரையரங்குகளில் ரிலீஸ் ஆன இந்த திரைப்படம், ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

இதுவரை, 60 கோடி ரூபாயை இந்த திரைப்படம் வசூலித்துள்ளது. இந்நிலையில், இயக்குநர் அபிஷன் ஜீவிந்த் தனது எக்ஸ் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அந்த பதிவில், “இந்த விஷயம் நடந்துவிட்டது என்று இப்போதும் என்னால் நம்பமுடியவில்லை. நான் மிகுந்த ஆர்வத்துடன் அவருடைய படங்களை பார்த்திருக்கிறேன்.

அப்படியான படங்களை உருவாக்கிய அந்த நபர், எனது பெயரை உச்சரிப்பார் என்பதை, நான் நினைத்துக் கூட பார்த்தது கிடையாது. நீங்கள் இந்த சிறுவனின் கனவை நனவாக்கியுள்ளீர்கள்” என்று கூறி, இயக்குநர் எஸ்.எஸ்.ராஜமௌலியை அவர் டேக் செய்துள்ளார்.

RELATED ARTICLES

Recent News