திரைப்படங்களின் செய்தியாளர்கள் சந்திப்பு நடக்கும்போது, சிறப்பு விருந்தினராக பங்கேற்கும் சிலர், படத்தை பற்றி பேசாமல், தேவையில்லாத டாப்பிக்குகளை பேசுகின்றனர்.
இது சில சமயங்களில், பெரும் சர்ச்சைகளையும் ஏற்படுத்திவிடுகின்றன. அந்த வகையில், என் சுவாசமே என்ற படத்தின் செய்தியாளர் சந்திப்பில், இயக்குநர் ஆர்.வி.உதயகுமார் கலந்துக் கொண்டார்.
அப்போது அவர் பேசியது பின்வருமாறு:-
”மேடையில் ஒருவர் சொன்னார். பெண்ணியம் பேசுபவர்களே பெண்களை ஆபாசமாக காட்டுகிறார்கள் என்று. நான் சொல்கிறேன். பெண்கள் தங்களை தாங்களே அவுத்துப்போட்டு காண்பிக்கிறார்கள்.
பெண்களே ஏன் இப்படி அவுத்துப்போட்டு காட்டுறீங்க என்று அவர்களை பார்த்துதான் கேட்க வேண்டும். எப்படி எல்லாம் தெரியும்படி உடை அணிய வேண்டும் என்பதை பெண்கள் ஆராய்ச்சி செய்வார்கள் போல.
தமிழ் சினிமாவைக்கூட காப்பாற்றிவிடலாம். ஆனால் முகநூல், இன்ஸ்டாகிராம் போன்றவற்றில் பெண்கள் அவர்களாகவே வீடியோ எடுத்து போடுகிறார்கள். அதனை பார்ப்பவர்களை எப்படி காப்பாற்ற முடியும்.
தமிழர்களுக்கு மலையாளிகளை ரொம்பவே பிடிக்கும். ஆனால் அவர்களுக்குத்தான் தமிழர்களை பிடிக்காது. முன்பெல்லாம் மலையாளத்திலிருந்துதான் பிட்டை வாங்கி வந்து இங்கு ஓட்டுவார்கள்.
மலையாளிகள் எப்படி நல்ல படங்கள் எடுப்பதில் வல்லவர்களோ. அதேபோல் பிட் எடுப்பதிலும் வல்லவர்கள்தான். அவர்கள்தான் அதனை முதன்முதலில் ஆரம்பித்து வைத்தவர்களும்கூட. எத்தனையாவது ரீலில் பிட் வருகிறது என்று கேட்டுவிட்டு; அந்த ரீலை மட்டும் பார்த்துவிட்டு எழுந்து போனவர்கள் எல்லாம் உண்டு”
என்று மிகவும் ஆபாசமான முறையில் அவர் பேசியிருந்தார்.
இது, அங்கிருந்தவர்களிடையே முகச்சுழிப்பை ஏற்படுத்தியிருந்தது. இதற்கு பலரும் தற்போது தங்களது கண்டனங்களையும் தெரிவித்து வருகின்றனர்.