மகனை ஹீரோவாக்கிய பிரபல இயக்குநர்!

குட்டிப்புலி படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானவர் முத்தையா. இந்த படத்திற்கு பிறகு, கொம்பன், மருது, விருமன் உள்ளிட்ட வெற்றிப் படங்களை கொடுத்துள்ளார்.

இந்நிலையில், இவர் தனது மகன் விஜய் முத்தையாவை ஹீரோவாக அறிமுகமாக்கியுள்ளார்.

அறிமுக நடிகை தர்ஷினி மற்றும் இரவின் நிழல் நடிகை பிரிகிடா சகா ஆகியோர் கதாநாயகிகளாக நடிக்கும் இப்படத்தை, முத்தையா தான் இயக்கவும் உள்ளார்.

சில நாட்களுக்கு முன்பு ஷூட்டிங்கை தொடங்கியுள்ள முத்தையா, படம் குறித்து பேசியுள்ளார்.

அதன்படி, “நான் இதுவரை 8 படங்களை இயக்கியுள்ளேன். அந்த படங்கள் அனைத்தும் கிராமத்து கதையம்சம் கொண்டது. ஆனால், இது நகரத்து கதையம்சம் கொண்ட படமாக இருக்கும்” என்று கூறியுள்ளார்.

RELATED ARTICLES

Recent News