தீனா படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானவர் ஏ.ஆர்.முருகதாஸ். இதையடுத்து, ரமணா, கஜினி, கத்தி, துப்பாக்கி என்று பல்வேறு ஹிட் படங்களை கொடுத்த இவர், தற்போது நடிகர் சிம்பு அல்லது சிவகார்த்திகேயனை வைத்து, புதிய படம் இயக்கும் முயற்சியில் இருந்து வருகிறார்.

இந்நிலையில், ஏ.ஆர்.முருகதாஸ், தனது மனைவி, மகள் மற்றும் மகனுடன் இருக்கும் புகைப்படம் ஒன்று, சமூக வலைதளங்களில் வெளியாகி, வைரலாக பரவி வருகிறது.
இதனை பார்த்த நெட்டிசன்கள், ஏ.ஆர்.முருகதாஸின் மகள் பெரிய பெண்ணாக வளர்ந்து விட்டாரே என்று கமெண்ட் பதிவிட்டு வருகின்றனர்.