உங்களுக்கே இவ்வளவு இருந்தால் சொந்தமாக உழைத்து சம்பாதித்த எனக்கு எவ்வளவு இருக்கும்” என தவெக தலைவர் விஜய் நாகையில் பேச்சு.
தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் இன்று நாகை மாவட்டத்தில் இன்று பரப்புரை மேற்கொண்டார். அப்போது பேசிய அவர், “நேரடியாக கேட்கிறேன் என்னை மிரட்டி பார்க்கிறீர்களா?அதற்கு நான் ஆள் இல்லை அப்படி என்ன செய்வீர்கள்..? கொள்கையை பெயரளவில் வைத்து குடும்ப ஆட்சி நடத்தும் உங்களுக்கே இவ்வளவு இருந்தால் சொந்தமாக உழைத்து சம்பாதித்த எனக்கு எவ்வளவு இருக்கும்” என நேரடியாக கேள்வி எழுப்பியுள்ளார்.
என்ன பெரிதாக நாங்கள் கேட்டு விட்டோம் மக்கள் வந்து நிம்மதியாக வந்து பார்த்து செல்வதற்கு அமைதியான ஒரு இடம்.அதை நாங்கள் தேர்வு செய்து அதற்கு நாங்கள் அனுமதி கேட்கிறோம். ஆனால் அந்த இடத்தை விட்டுவிட்டு மக்கள் எங்கு நெருக்கடியோடு நிற்பார்களோ அந்த இடமாக பார்த்து நீங்கள் தேர்வு செய்து எங்களுக்கு கொடுக்கிறீர்கள் உங்களுடைய எண்ணம் தான் என்ன என்றும் பேசியுள்ளார்.
நான் மக்களை சந்திக்கக் கூடாது அவர்களுடன் பேசக்கூடாது, அவர்களுடைய குறைகளை கேட்கக்கூடாது, அவர்களுக்காக குரல் கொடுக்கக் கூடாது, என்ன தான் சார் உங்கள் எண்ணம். சரி ஒரு அரசியல் தலைவன் என்பதை எல்லாம் மறந்து விடுங்கள் ஒரு சாதாரண ஒரு தமிழ்நாட்டு மண்ணோட ஒரு மகனாக தமிழ் மக்களுடைய சொந்தக்காரனாக, என் மக்களை என் குடும்பத்தை என் சொந்தங்களை நான் பார்க்க போனால் என்ன பண்ணுவீர்கள்..? அப்போதும் தடை போடுவீர்களா..!
வேண்டாம் சார் இந்த அடக்குமுறை, அராஜக எல்லாம் வேண்டாம் நாம் ஒன்றும் இங்கு தனியாள் கிடையாது, மாபெரும் மக்கள் சக்தி உடைய பிரதிநிதி, மாபெரும் பெண்கள் சக்தி உடைய சகோதரன், மாபெரும் இளைஞர் இயக்கமாக இருக்கிறோம் சார் மறுபடியும் சொல்றேன் 2026ல் இரண்டு பேருக்கு தான் இங்கு போட்டியே ஒன்று தவெக மற்றொன்று திமுக என காட்டமாக தெரிவித்துள்ளார்.
இந்த பூச்சாண்டி வேலையெல்லாம் காட்டுறதையெல்லாம் விட்டுவிட்டு தில்லா கெத்தா நேர்மையா தேர்தலை சந்திக்க வாங்க சார்….
பாத்துக்கலாம் சார் கொள்கையை பெயருக்கு மட்டும் வைத்துக்கொண்டு குடும்பத்தை வச்சு தமிழகத்தை கொள்ளை அடிக்கும் நீங்களா..? அல்லது தமிழ்நாட்டில் இருக்கும் ஒவ்வொரு வீட்டுக்குள் ஒருத்தனாக இருக்கும் இந்த விஜய்யா..? பார்த்துக்கலாம் சார்.
இனிமே இது போன்ற தடைகள் எல்லாம் போட்டீர்கள் என்றால் நான் நேரடியாக மக்களிடமே அனுமதி கேட்டுக்கொள்கிறேன் மக்களே நீங்கள் சொல்லுங்கள் நான் உங்களை பார்க்க வரக்கூடாதா..? நான் உங்களிடம் பேசக்கூடாதா..? உங்களுடைய குறைகளை கேட்க கூடாதா? உங்களுக்காக நான் குரல் கொடுக்கக் கூடாதா..? என பல அடுக்கடுக்கான கேள்விகளை முன்வைத்து பேசினார்.
இப்படி நமக்கு எல்லாம் தடையா போடுறாங்களே இந்த திமுக அரசு மறுபடியும் ஆட்சிக்கு வரணுமா? உங்க நல்லதுக்காக இருக்கும் உங்க தமிழக வெற்றி கழகம் ஆட்சி அமைய வேண்டுமா?? சத்தமா… சத்தமா… கேட்டுச்சா மை டியர்……. நான் தான் ஏற்கனவே சொல்லி இருக்கேன்ல அவருக்கு ஆசையாக பாசமாக கூப்ட்டா பிடிக்கலைனு ஏன் மறுபடியும் … கேட்டுச்சா சிஎம் சார்…. இந்தப் போர் முழக்கம் ஒரு நிமிடம் கூட உங்கள தூங்க விடாது, உங்களை துரத்திக் கொண்டே வரும்… என தவெக தலைவர் விஜய் இவ்வாறே பேசினார்.