மணிரத்னம் இயக்கத்தில், சிம்பு, கமல், த்ரிஷா ஆகியோர் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் தக் லைஃப். வரும் ஜூன் 5-ஆம் தேதி அன்று, இந்த திரைப்படம் ரிலீஸ் ஆக உள்ளது.
இந்நிலையில், இந்த படத்தில் தான் யாருக்கு ஜோடி என்பதை, நடிகை த்ரிஷா இசை வெளியீட்டு விழாவில் தெரிவித்துள்ளார்.
அதாவது, “தக் லைஃப் பட டிரைலரை பார்த்த பிறகு, நான் யாருக்கு ஜோடி? என்ற கேள்வி எழுந்திருக்கும். நீங்கள் பார்த்தது வெறும் 2 நிமிட காட்சிதான். 2 மணி நேர படத்தை பார்த்த பிறகு, உங்களுக்கு அது புரியும்” என்று தெரிவித்தார்.
நடிகை த்ரிஷா, சிம்புவுக்கு ஜோடியா? கமலுக்கு ஜோடியா? என்ற குழப்பம் ஏற்பட்ட நிலையில், தற்போது நடிகை த்ரிஷா, ரசிகர்கள் ஹிண்ட் கொடுத்துள்ளார்.