தோனியின் தீவிர ரசிகர்: மர்மமான முறையில் இறப்பு!

கடலூர் மாவட்டம் திட்டக்குடி அடுத்துள்ள அரங்கூர் கிராமத்தை சேர்ந்தவர் கோபி கிருஷ்ணன் (34) இவருக்கு அன்பரசி என்ற மனைவியும் கிஷோர் (10) மற்றும் சக்திதரன் (8) என்ற ஆண் குழந்தையும் உள்ள நிலையில் கடந்த பத்து நாட்களுக்கு முன்பு பெண் குழந்தையும் பிறந்துள்ளது.

இவர் டோனியின் தீவிர ரசிகர் ஆவர் சி.எஸ்.கே அணியின் வண்ணத்தில் வீட்டின் கலரை மஞ்சள் நிறத்தில் மாற்றியவர் வீடு முழுவதிலும் டோனியின் படத்தை வரைந்துள்ளார். மிகவும் பிரபலம் அடைந்துள்ளார் இவர் வெளி நாட்டில் இருந்தாலும் உலக கோப்பை போட்டிகள் நடைபெரும் போது சொந்த நாட்டிற்கு வந்துவிடுவார்.

இவ்வாறு டோனியின் மீது தீவிர பற்று கொண்டிருந்தார் இவர் வீட்டிற்கு இளைஞர் மேம்பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நேரில் வந்து வாழ்த்து கூறியுள்ளார். பல்வேறு தலைவர்கள் மற்றும் இளைஞர்கள் இவர் டோனி படம் வரைந்த வீட்டை வந்த பார்த்து சென்றுள்ளனர்.

இந்நிலையில் இன்று அதிகாலை வீட்டில் மர்மமான முறையில் தூக்கில் சடலமாக தொங்கிய நிலையில் உள்ளார். உடலை கைப்பற்றிய ராமநத்தம் போலீசார் உடலை கைபற்றி முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

நேற்று இரவு கிராமத்தில் நடைபெற்ற விளையாட்டு போட்டியில் கோபி கிருஷ்ணனுக்கும் அதோ ஊரைச் சேர்ந்த சில இளைஞர்களுக்கும் கொடுக்கல் வாங்கல் இருந்து வந்துள்ளது முன்விரோதம் காரணமாக விளையாட்டு போட்டியில் தகராறு ஏற்பட்டது. இதில் கோபிகிருஷ்ணனை சிலர் தாக்கியதாக தெரியவந்துள்ளது.

இதனால் மனமுடைந்த கோபி கிருஷ்ணன் அதிகாலை வீட்டில் மின் விசிறியில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக தெரியவந்துள்ளது. தாக்குதல் நடத்திய நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அவர்களது குடும்பத்தினர் போலீசாருக்கு வேண்டுகோள் வைத்துள்ளனர் இதனால் இப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

RELATED ARTICLES

Recent News