தனுஷ் நடிப்பில் கடந்த 2009ம் ஆண்டு வெளியான படிக்காதவன் திரைப்படத்தில் நகைச்சுவை கதாபாத்திரத்தில் வடிவேலு நடிப்பதாக ஒப்பந்தம் ஆனார். ஆனால் படக்குழுவினருடன் ஏற்பட்ட பிரச்சனை காரணமாக அந்த படத்தில் இருந்து விலகினார். இதையடுத்து வடிவேலுக்கு பதிலாக விவேக் நடித்தார்.
அசால்ட் ஆறுமுகம் என்ற விவேக் நடித்த கதாப்பாத்திரம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு பெற்றது. இந்தப் படத்தின் மூலம் தனுஷ் – விவேக் காம்போ உருவானது.

தற்போது தனுஷ் அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் தயாராகி வரும் கேப்டன் மில்லர் படத்தில் நடித்து வருகிறார். இதையடுத்து மாரி செல்வராஜ் இயக்கத்தில் தனுஷ் புதிய படத்தில் நடிக்கவிருப்பதாக சமீபத்தில் அறிவிப்பு வெளியானது. இந்தப் படத்தில் தனுஷுடன் இணைந்து வடிவேலு நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது.