இயக்குனர் அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் தனுஷ் ‘கேப்டன் மில்லர்’ படத்தில் நடித்துள்ளார்.இப்படத்தின் டீசர் மற்றும் பாடல் சமீபத்தில் வெளியாகி கவனம் பெற்றது. இதையடுத்து இப்படத்தின் போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. அதுமட்டுமல்லாமல் இப்படம் டிசம்பர் 15-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளதாக படக்குழு முன்பே அறிவித்திருந்தது.
இந்நிலையில், இப்படத்தின் ரிலீஸ் தேதி மாற்றப்பட்டுள்ளது. அதன்படி, ‘கேப்டன் மில்லர்’ திரைப்படம் பொங்கலுக்கு வெளியாகவுள்ளதாக படக்குழு போஸ்டரை பகிர்ந்து அறிவித்துள்ளது. ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் ரஜினி சிறப்பு தோற்றத்தில் நடித்துள்ள ‘லால் சலாம்’ திரைப்படம் பொங்கலுக்கு திரையரங்குகளில் வெளியாகவுள்ளது குறிப்பிடத்தக்கது.கணவன் மனைவி ஆகிய இருவா் படமும் ஒரே நாளில் வெளியாவதால் இருவாிடமும் கடும் போட்டி நிலவிவருகிறது என நெட்டிசன்கள் பலரும் விமா்சனம் செய்து வருகின்றனா் .