“கன்னடம் கற்றுக்கொள்ள ஆசை..” ஜனாதிபதி திரவுபதி முர்மு பேச்சு..!!

கர்நாடக மாநிலம் மைசூரில் மத்திய அரசுக்கு சொந்தமான பேச்சு மற்றும் கேட்கும் திறன் மருத்துவமனையின் 60-ம் ஆண்டு வைர விழா நேற்று நடைபெற்றது., இதில் பங்கேற்பதற்காக இந்திய குடியரசு தலைவர் திரவுபதி முர்மு இன்று புதுடெல்லியில் இருந்து தனி விமானம் மூலம் மைசூர் வந்தடைந்தார்.

அங்கு கர்நாடக முதலமைச்சர் சித்தராமையா பூங்கொத்து கொடுத்து வரவேற்றார். பின்னர் மருத்துவமனையின் 60-ம் ஆண்டு வைர விழாவில் பங்கேற்று விழாவை தொடங்கி வைத்தார்.

பின்னர் நிகழ்ச்சியில் உரையாற்றிய அவர்.,

தான் நாட்டில் உள்ள அனைத்து மொழிகளையும், கலாசாரங்கள் மற்றும் பண்பாடு ஆகியவற்றை மதிப்பதாகவும்., அவற்றுக்கு மரியாதை கொடுப்பதாகவும் நெகிழ்ச்சி தெரிவித்தார்.,

மேலும் கர்நாடக முதலமைச்சர் சித்தராமையா., திரவுபதி முர்முவிடம் தங்களுக்கு கன்னடம் தெரியுமா எனக்கூறியதை குறிப்பிட்டு., தான் கன்னடம் மொழியை கற்றுக்கொள்ள மிகுந்த ஆர்வத்துடன் இருப்பதாகவும், அதற்கான முயற்சிகளை மேற்கொண்டு வருவதாகவும் கூறினார்.

தொடர்ந்து பேசிய அவர்., கன்னட மொழி தன்னுடைய தாய் மொழியாக இல்லை என்றாலும்., கன்னடம் உட்பட பல்வேறு மொழிகளை கற்றுக்கொள்ள விரும்புவதாகவும் நாட்டின் அனைத்து மொழி, கலாசாரம் மற்றும் பண்பாட்டை காத்திட பாடுபடுவதாகவும் குடியரசு தலைவர் திரவுபதி முர்மு இவ்வாறே மேடையில் பேசினார்..

RELATED ARTICLES

Recent News