வளசரவாக்கம் அடுத்த போரூர் பகுதியில் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது.
ஆறாம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரை உள்ள இந்த பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் 1500-க்கும் மேற்பட்ட மாணவிகள் பயின்று வருகின்றனர்.
இந்த பள்ளி வளாகத்தில் உள்ள கழிப்பறைகள் முறையாக பராமரிக்கப்படவில்லை எனவும் தண்ணீர் சரியாக வரவில்லை என கூறி இன்று காலை பள்ளிக்கு வந்த மாணவிகள் வகுப்புகளை புறக்கணித்துவிட்டு பள்ளியின் எதிரே உள்ள சாலையில் அமர்ந்து சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதில் பள்ளியில் கழிவறைகளை முறையாக பராமரிக்காத ஆசிரியர்களை கண்டித்து கோஷங்கள் எழுப்பினார்கள் இதையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போரூர் போலீசார் சாலை மறியலில் ஈடுபட்ட மாணவர்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.
மேலும் மாநகராட்சி அதிகாரிகள் விரைந்து வந்து மாணவிகளின் குற்றம் சாட்டிய கழிவறைகளை ஆய்வு செய்து உரிய நடவடிக்கை எடுப்பதாக கூறியது அடுத்து மாணவிகள் வகுப்பறைக்கு சென்றனர்.
இது குறித்து மாணவர்கள் கூறுகையில் பள்ளி வளாகத்தில் உள்ள கழிவறைகள் முறையாக பராமரிக்கப்படவில்லை எனவும் தண்ணீர் அனைத்தும் மஞ்சள் நிறத்தில் வருவதால் மாணவிகளுக்கு தொற்று நோய் ஏற்படும் அபாயம் உள்ளதாகவும் இது குறித்து பலமுறை பள்ளி ஆசிரியர்களிடம் கூறிய நிலையில் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை என தொடர்ந்து குற்றம் சாட்டினர் கழிவறை சரியில்லை என பள்ளி மாணவிகள் வகுப்பறைகளை புறக்கணித்துவிட்டு சாலை மறியலில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பு ஏற்படுத்தியது.