சூரி நடிப்பில் உருவாகியுள்ள மாமன் திரைப்படமும், சந்தானம் நடிப்பில் உருவாகியுள்ள டிடி நெக்ஸ்ட் லெவல் திரைப்படமும், இன்று திரையரங்குகளில் ரிலீஸ் ஆகியுள்ளது. இந்த இரண்டு திரைப்படங்களையும் பார்த்த நெட்டிசன்கள், தங்களது விமர்சனங்களை, எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டு வருகின்றனர்.
அதன்படி, பல்வேறு உணர்வுபூர்வமான காட்சிகளுடன், குடும்பமாக சென்று பார்க்கக் கூடிய படமாக மாமன் உருவாகியுள்ளது என்றும், கடைக்குட்டி சிங்கம், நம்ம வீட்டு பிள்ளை மாதிரியான படங்களை விரும்பும் ரசிகர்களுக்கு இந்த திரைப்படம் மிகவும் பிடிக்கும் என்றும், கருத்து கூறப்பட்டுள்ளது.
சில இடங்களில் இடம்பெற்றுள்ள அதிக நாடகத்தன்மை கொண்ட காட்சிகள், படத்தின் மைனஸ் ஆக உள்ளது என்றும், சொல்லப்படுகிறது.
சந்தானத்தின் டிடி நெக்ஸ்ட் லெவல் படத்தை பொறுத்தவரை, கதை சொல்லலில் புதிய முயற்சியை கையாண்டு இருப்பதாகவும், ஆனால், 4-ல் இருந்து 5 சீக்வன்ஸ்கள் மட்டும், ரசிகர்களை சிரிக்க வைப்பதாகவும் சொல்லப்படுகிறது. குறிப்பாக, படத்தின் முதல் பாதி சிறப்பாக இருப்பதாகவும், 2-ஆம் பாதி தடுமாற்றத்துடன் இருப்பதாகவும், கலவையான விமர்சனங்கள் கிடைத்துள்ளது.