சென்னை குன்றத்தூரில் மருமகளே கள்ளக்காதலனை வைத்து மாமியாரை தாக்கி நகை கொள்ளையடித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை குன்றத்தூர் காந்தி சாலையைச் சேர்ந்தவர் ராஜேந்திரன், அபிதா தம்பதியினர்., நேற்று இரவு வீட்டிற்குள் நுழைந்த மர்ம நபர் இருவர்., 11 பவுன் நகைகளை பறித்துக் கொண்டு மாமியார், மருமகள் இருவரையும் கட்டிப்போட்டு சென்றதாக குன்றத்தூர் போலீசில் புகார் அளிகப்பட்டுள்ளது.
புகாரின் பேரில் குன்றத்தூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். அப்போது போலீசாருக்கு பல சந்தேகங்கள் எழுந்துள்ளது.
அதாவது வள்ளியம்மாள் (மாமியார்) உடலில் மட்டும் காயங்கள் இருந்த நிலையில் அபிதா (மருமகளின்) உடலில் காயங்கள் ஏதும் இல்லாமல் இருந்துள்ளது. இதுகுறித்த கேட்டபோது அவர் முன்னுக்கு பின் முரணான
பதில் அளித்துள்ளார்.
இதனை தொடர்ந்து அங்கிருந்த கண்காணிப்பு கேமரா காட்சிகளை ஆய்வு செய்தபோது சம்பவம் நடந்த நேரத்தில் அபிதா ஒருவரிடம் பேசியதும் ஒருவருடன் நின்று பேசிக் கொண்டிருந்ததும் தெரியவந்துள்ளது.
இதுகுறித்து அபிதாவிடம் விசாரணை மேற்கொண்ட போதே பல திடுக்கிடும் தகவல்கள் வெளியானது.
அபிதாவிற்கு திருமணமாகி குழந்தைகள் இல்லை என்றும் அடிக்கடி அருகில் உள்ள கோவிலுக்கு சென்ற நிலையில் ஆண் நபர் ஒருவருடன் பழக்கம் ஏற்பட்டு கள்ளக்காதலாக மாறியுள்ளது.
இந்நிலையில்., தனது மாமியாரிடம் அதிக நகை இருப்பதாகவும்., அதனை கொள்ளையடித்தால் இருவரும் பங்கு போட்டுக் கொள்ளலாம் என கூறி இந்த சம்பவத்தை கூட்டாக சேர்ந்து அரங்கேற்றியுள்ளனர்.
இதற்கு முன்னும் இப்படி ஒரு சம்பவம் அரங்கேறிய நிலையில் போலீசில் புகார்கள் ஏதும் அழிக்கப்பாடாததால்., மீண்டும் இப்படி ஒரு திருட்டு சம்பவம் நடந்தால் புகார் கொடுக்கமாட்டார்கள் என நினைத்த அபிதாவின் இந்த முறை தவிடுபொடியாகியுள்ளது.
இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து தலைமறைவாகவுள்ள கள்ள காதலனை தேடி வருகின்றனர். கள்ளக்காதலனை வைத்து மாமியார் வீட்டில் மருமகளே கொள்ளையடிக்க முயற்சித்த சம்பவம் பெரும் அதிரச்சியை ஏற்படுத்தியுள்ளது..