தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் என சுமார் 1000 பாடல்களுக்கு மேல் நடன இயக்குநராக பணியாற்றிய
சம்பத்ராஜ் காலமானார். அவருக்கு வயது 54. அஜித்தின் முதல்படமான அமராவதி, மற்றும் காதல் கோட்டை போன்ற படங்களில் சம்பத்ராஜ் பணியாற்றியுள்ளார்.
கடந்த சில நாட்களுக்கு முன்னர் சிறுநீரகத்தில் பாதிப்பு ஏற்பட்டது. இதையடுத்து ராமச்சந்திரா மருத்துவமனையில் சிகிச்சை எடுத்து வந்துள்ளார். இந்நிலையில் திடீர் என மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்தார்.

பிரபல நடிகரும் இயக்குனருமான மனோபாலா நேற்று காலமானார். இந்நிலையில் இந்த சம்பவம் திரையுலகினர் மற்றும் ரசிகர்கள் மத்தியில் மேலும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.