தெலங்கானா முதல்வராக காங்கிரஸ் கட்சியின் ரேவந்த் ரெட்டி கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் பதவி ஏற்றார். அதன் பிறகு வாக்குறுதிகளை நிறைவேற்றும் பணியை தொடர்ந்து மேற்கொண்டு வருகிறார்.
இந்நிலையில் இன்று மேலும் இரண்டு வாக்குறுதிகள் நிறைவேற்றப்பட்டுள்ளன. அதன்படி 500 ரூபாய்க்கு எல்பிஜி சிலிண்டர் ரீஃபில் மற்றும் 200 யூனிட் வரை இலவச மின்சாரம் என மேலும் இரண்டு உத்தரவாதங்களை தெலங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டி முறைப்படி தொடங்கி வைத்துள்ளார்.
சட்டப்பேரவைத் தேர்தலின்போது அளித்த அனைத்து உறுதிமொழிகளையும் தனது அரசு நிறைவேற்றும் என்றும் முதல்வர் ரேவந்த் ரெட்டி தெரிவித்திருந்தார். அதன்படியே 500 ரூபாய்க்கு சமையல் எரிவாயு சிலிண்டர் ரீஃபில் மற்றும் 200 யூனிட் இலவச மின்சாரம் ஆகிய திட்டங்கள் இன்று தொடங்கப்பட்டுள்ளன.