தமிழ் சினிமாவில் சண்டை பயிற்சியாளராக இருப்பவர் கனல் கண்ணன். இவர் இந்து மதத்திற்கு ஆதரவாக பேசுகிறேன் என்ற பெயரில் மற்ற மதங்களை தரக்குறைவாக பேசுவது, பொய்யான தகவல்களை பரப்புவது என அடிக்கடி சர்ச்சையில் சிக்கி வருகிறார்.

இந்நிலையில் கனல் கண்ணன் கிறிஸ்தவ மதம் குறித்து அவதூறாக கருத்து பதிவிட்டதாக திமுகவைச் சேர்ந்த ஜோசப் பெனடிக்ட் என்பவர் புகார் அளித்தார். அந்த புகாரின் பெயரில் கனல் கண்ணன் மீது சைபர் கிரைம் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
இதற்கு முன்னதாக பெரியார் சிலை குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசியதாக கைது செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.