ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் உருவாகி இருக்கும் திரைப்படம் ‘லால் சலாம்’. கிரிக்கெட்டை மையமாக வைத்து உருவாகி இருக்கும் இந்த திரைப்படத்தில் விக்ராந்த்,விஷ்ணு விஷால் ஆகியோரும் சிறப்பு தோற்றத்தில் சூப்பா் ஸ்டாா் ரஜினிகாந்த் , கிாிக்கெட் வீரர் கபில் தேவ் ஆகியோா் நடித்துள்ளனா்.
பல்வேறு எதிா்பாா்ப்புகளுக்கு மத்தியில் வெளியாகவிருக்கும் இப்படத்தின் அப்டேட்டை படக்குழு அவ்வப்போது வெளியிட்டுகொண்டிருக்கிறது. அதன்படி இதன் தயாாிப்பு நிறுவனமான லைகா தற்போது ஒரு அப்டேட்டை அறிவித்துள்ளது. அதாவது, கபில் தேவ் அவாின் டப்பிங் பணியை முடித்துள்ளதாகபோஸ்டருடன் தொிவித்துள்ளது. இதனை லால் சலாம் ரசிகா்கள் கொண்டாடிவருகின்றனா்.