பொள்ளாச்சி வழக்கு.. நீதிமன்றத்தின் அதிரடி தீர்ப்பு..

கோவை மாவட்டம் பொள்ளாச்சி பகுதியை சேர்ந்த இளம்பெண்கள், பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டிந்தனர். கடந்த 2019-ஆம் ஆண்டு நடைபெற்ற இந்த சம்பவம், தமிழ்நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது.

இந்த சம்பவம் தொடர்பாக, காவல்துறையில் பாதிக்கப்பட்ட பெண்கள், புகார் அளித்த நிலையில், 9 பேர் கைது செய்யப்பட்டிருந்தனர். இந்த வழக்கு நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டு வந்த நிலையில், தற்போது கைது செய்யப்பட்ட 9 பேரும் குற்றவாளிகள் என்று தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், தற்போது குற்றவாளிகளுக்கு தண்டனைகள் அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, 9 பேரும், சாகும்வரை ஆயுள் தண்டனை வழங்க வேண்டும் என்று தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. மேலும், பாதிக்கப்பட்ட 8 பெண்களுக்கு 85 லட்சம் இழப்பீடு வழங்கவும், நீதிபதி தனது தீர்ப்பில் குறிப்பிட்டுள்ளார்.

RELATED ARTICLES

Recent News