கேரள மாநிலம் கொல்லங்கோட்டை சேர்ந்தவர் செவிலியர் நிமிஷா பிரியா (வயது 34). இவர் தனது சொந்த ஊரில் இருந்து 2008-ம் ஆண்டு ஏமன் நாட்டிற்கு வேலைக்காக சென்றுள்ளார்.
அப்போது அங்கு உடன் பணிபுரிந்த டாமி தாமஸ் என்பவரை கடந்த 2011ம் ஆண்டு காதலித்து திருமணம் செய்துள்ளார்.. பின்னர் 2014ம் ஆண்டு அந்நாட்டில் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடியால் டாமி தாமஸ் சொந்த நாடு திரும்ப முடிவு செய்துள்ளார்.. ஆனால் நிமிஷா இதற்கு மறுப்பு தெரிவிக்கவே தாமஸும், அவர்களது மகளும் மட்டும் கேரளா திரும்பியுள்ளனர்.
பின்னர் தன்னுடைய வருமானத்தை ஈட்ட முடிவு செய்த நிமிஷா பிரியா., தன்னுடைய செவிலியர் வேலையை விட்டுவிட்டு தனியாக கிளீனிக் ஒன்றை தொடங்கியுள்ளார். ஏமன் நாட்டின் விதிப்படி அந்நாட்டு குடிமகனால் மட்டுமே அங்கு சொந்த நிறுவனம் தொடங்க முடியும்.
தன்னுடைய தொழிலை முடக்க விரும்பாத நிமிஷா., அதே சேர்ந்த தலால் அப்துல் மஹ்தி என்பவரை தொழில் பார்ட்னராக சேர்த்துக்கொண்டுள்ளார். பின்னர் வருமானம் அதிகம் வரவே பணத்தாசையில் விழுந்த தலால் அப்துல் மஹ்தி, ஜாயிண்ட் அக்கவுண் மூலம் பணத்தை எடுத்துவிட்டு நிமிஷா பிரியாவை ஏமாற்றியுள்ளார்..
மேலும் அவரது பாஸ்போர்ட்டை வாங்கி வைத்து கொண்டு., உடலளவிலும் மனதளவிலும் துன்புறுத்தப்பட்டதாக சொல்லப்படுகிறது., இதனால் கடும் மனஉளைச்சலுக்கு ஆளான நிமிஷா .,அப்துல் மஹ்தியிடம் இருந்து தப்பி செல்வதற்காக அளவுக்கு அதிகமான மயக்க மருந்து கொடுத்ததால் அப்துல் மஹ்தி உயிரிழந்துள்ளார்..
இதுகுறித்து தகவலறிந்து வந்த போலீசார் நிமிஷா பிரியாவை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்., மேலும் தன்னை கொடுமைப்படுத்தியதால் தான் தற்காப்பிற்காக மயக்க மருந்து கொடுத்தாக நிமிஷா பிரியா நீதிபதியிடம் தெரிவித்துள்ளார்.. ஆனால் இதனை ஏற்க மறுத்த நீதிமன்றம் மரண தண்டனை விதித்து உத்தரவிட்டுள்ளது.. வருகின்ற ஜூன் 16-ம் தேதி நிறைவேற்றப்பட உள்ளது குறிப்பிடத்தக்கது..
நீதிமன்றத்தின் இந்த தீர்ப்பு நிமிஷா பிரியாவின் குடும்பத்தில் பெரும் வேதனையிலும் அதிர்ச்சியிலும் ஆழ்த்தியுள்ளது..