அமெரிக்காவில் உள்ள ஓக்லஹோமா என்ற பகுதியை சேர்ந்தவர் டிடி ஓ டெல். இவரும், இவரது மனைவி ஜெஸ்ஸி என்பவரும், தனது வீட்டின் அருகே உள்ள ஸ்டார் பக்ஸ் உணவு விடுதிக்கு சென்று, தினமும் காபி குடிப்பது வழக்கம்.
இவர்கள் குடிக்கும் காபிக்கு, தினமும் 10 டாலர் மட்டுமே பில்லாக வரும். ஆனால், கடந்த மாதம் இவர்கள் ஸ்டார் பக்ஸ் சென்றபோது, 2 காபிக்கு 3.6 லட்சம் ரூபாய் கட்டணமாக வந்துள்ளது. ஆனால், அதனை அப்போது பார்க்காத அந்த தம்பதி, கட்டணத்தை செலுத்திவிட்டு, வீட்டிற்கு வந்துள்ளனர்.

சில நாட்கள் கழித்து, பில்லை பார்த்து அதிர்ச்சி அடைந்த அவர்கள், ஸ்டார் பக்ஸ் நிறுவனத்தை அனுகி, இதுதொடர்பாக கேட்டனர். அதற்கு, மெஷின் பிரச்சனையால், அதிகத் தொகை கட்டணமாக வந்துள்ளது என்றும், மீதித் தொகை உங்களது வங்கிக் கணக்கிற்கு செலுத்தப்படும் என்றும் கூறினர். ஆனால், தற்போது வரை, அந்த பணம் அவர்களுக்கு கொடுக்கப்படவில்லையாம்.
இதனால், கடும் கோபம் அடைந்த தம்பதி, அந்த பில்லை சமூக வலைதளங்களில் பதிவிட்டு, நடந்தவற்றை கூறியுள்ளனர். அந்த பதிவு தற்போது இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.