ஒவ்வொரு கவுன்சிலரும் ஐந்து ஐந்து கிலோ உடல் எடையை குறைக்க வேண்டும் என அமைச்சர் கே.என்.நேரு நகைச்சுவையாக தெரிவித்தார்.
சென்னை மாநகராட்சி ரிப்பன் மாளிகை வளாகத்தில் கட்டப்பட்டுள்ள சீர்மிகு ஆளுமைக்கட்டடம் மற்றும் கட்டளை மைய கட்டடத்திற்கு முத்தமிழறிஞர் கலைஞர் மு.கருணாநிதி மாளிகை பெயர்ப் பலகையினை நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு திறந்து வைத்து மேயர் பிரியா மற்றும் நகராட்சி நிர்வாகத்துறை செயலாளர் கார்த்திகேயன், மாநகராட்சி ஆணையர் ராதாகிருஷ்ணன் உள்ளிட்டோருடன் கட்டடத்தை பார்வையிட்டார்.
மேலும் மாநகராட்சி அலுவலர்கள் மற்றும் பணியாளர்களுக்கான உடற்பயிற்சிக் கூடத்தினையும் திறந்து வைத்ததுடன் அமைச்சர் கே.என் நேருவும் துணை மேயர் மகேஷ் குமாரும் உடற்பயிற்சி மேற்கொண்டனர்.
மேலும் உடற்பயிற்சி கூடத்தை பார்வையிடும் போது ஒவ்வொரு கவுன்சிலரும் ஐந்து ஐந்து கிலோ உடல் எடையை குறைக்க வேண்டும் என நகைச்சுவையாக வலியுறுத்தினார் இது அங்கிருந்தோர் மத்தியில் சிரிப்பை ஏற்படுத்தியது.