கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் எஸ்.ஜே.சூர்யா மற்றும் ராகவா லாரன்ஸ் நடிப்பில் ஜிகர்தண்டா 2 வெளிவரவுள்ளது. மாபெரும் எதிா்பாா்ப்பில் 8 வருடங்கள் கழித்து உருவாகியுள்ள இப்படம் நாளை (நவம்பர் 10) திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.
சமீபத்தில் இப்படத்தின் டிரைலர் வெளியானது, அதில், தமிழ் சினிமாவின் முதல் கருப்பு ஹீரோ போன்ற வசனங்கள் இடம்பெற்று ரசிகர்களை கவர்ந்தது. தொடா்ந்து பல்வேறு அப்டேட்டுகளை கொடுத்து வரும் படக்குழு தற்போது , ‘ஜிகர்தண்டா 2’ படத்தில் இடம்பெற்றுள்ள ‘மாமதுர’ பாடலின் வீடியோவை வெளியிட்டுள்ளது. இந்த வீடியோவை ரசிகர்கள் ஷோ் இணையத்தில் ட்ரெண்டாக்கி வருகின்றனர்.