ரயில்களில் தொடர் செல்போன் திருட்டு..!! சிக்கிய கும்பல்..!!

ஓடும் இரயிலில் செல்போன் பறித்துச் செல்லும் கும்பலை ஆவடி ரயில்வே காவல்துறையினர் கையும் களவுமாக கைது செய்து சிறையில் அடைத்தனர்.

சென்னை அடுத்த நெமிலிச்சேரி ஸ்ரீநாத் நகர் தனியார் குடியிருப்பைச் சேர்ந்தவர் ஜனனி (வயது 20) இவர் தனியார் நிறுவன ஊழியராக இவர் பணியாற்றி வருகிறார்.

இந்நிலையில் கடந்த ஆகஸ்ட் மாதம் 4ம் தேதி இரவு, பணிகளை முடித்து விட்டு மின்சார ரயிலில் சென்று கொண்டிருந்த போது மர்ம நபர் ஒருவர் செல்போனை பறித்துக்கொண்டு சென்றுள்ளார். பின்னர் இது குறித்து இரயில்வே காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். புகாரின் பேரில் ஆவடி ரயில்வே போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணையை தொடங்கியுள்ளனர்.

அப்போது ஆவடி ரயில் நிலையம் அருகே சந்தேகத்திற்கு இடம் அளிக்கும் விதமாகா சுற்றித்திரிந்த மூன்று பேரை பிடித்து விசாரணை மேற்கொண்டதில் அவர்கள் ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்த ராஜா தாஸ் (வயது 30) வாசுதேவ் யாதவ் (வயது 27) விக்கி யாதவ் (வயது 35) என்பதும் இவர்கள் செல்போன் திருட்டில் ஈடுபடுபவர்கள் என்பதும் தெரியவந்தது.

இதனை தொடர்ந்து அவர்களிடம் இருந்து செல்போன்களை பறிமுதல் செய்து உரிமையாளர்களிடம் ஒப்படைத்து மூவரையும் கைது செய்து பூந்தமல்லி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

RELATED ARTICLES

Recent News