இந்தியா கூட்டணிக்கு சவால் கிடையாது! செல்வப்பெருந்தகை

அதிமுக ஒன்றிணைந்தால் எடப்பாடி பழனிச்சாமி அவர்களுக்காக நிற்கும் நிலை ஏற்படும் என தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப் பெருந்தகை விமர்சித்துள்ளார்.

ஒன்றிய பாஜக அரசு மற்றும் தேர்தல் ஆணையத்தின் வாக்கு திருட்டு பற்றிய மோசடி குறித்த விளக்க மாநில மாநாடு தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி சார்பில் நெல்லை பாளையங்கோட்டையில் நடைபெறவுள்ளது.. அதன் முன்னேற்பாடு பணிகளை காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை நேரில் சென்று ஆய்வு செய்தார்.

அப்போது செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர்., தனிமனிதனின் வாக்கு உரிமையானது இப்போது வாக்கை பறிப்பதற்கும் அடுத்ததாக குடியுரிமையை பறிக்க ஆர்எஸ்எஸும் பாஜகவும் நினைப்பதாக குற்றம்சாட்டினார்.

இந்த மோசடி வேலையை மக்களிடம் எடுத்துரைக்கும் விதமாக பீகாரில் மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி நடைபயணம் மேற்கொண்டதை குறிப்பிட்டு., தமிழகத்தில் வாக்கு திருட்டு நடந்து விடக்கூடாது என்பதற்காக விழிப்புணர்வு மாநாடு நடத்தப்பட இருப்பதாக தெரிவித்தார்.

தொடர்ந்து பேசிய அவர்., பாஜக – அதிமுக கூட்டணி என்பது மூழ்கும் கப்பல் எனவும், இந்த கூட்டணி இயற்கை எதிரான கூட்டணி என விமர்சித்தார்.

இந்தியா கூட்டணியை தோற்கடிக்க இந்த கூட்டணி வெற்றி பெற வேண்டும் என சொல்லி வந்த டிடிவி தினகரன் மக்கள் மனநிலையை பார்த்து வெளியே வந்து விட்டார் நான்கு ஆண்டுகளாக அமைதியாக இருந்த செங்கோட்டையன் கழக குரலாக இப்போது ஒலிப்பதற்கு காரணம் அந்த கூட்டணி சரியில்லை என்பதற்காகவே பாஜக இருக்கும் இடம் சர்வநாசம் அனைத்து மாநிலங்களிலும் இது நடந்துள்ளது. தமிழகத்தில் அதிமுக நான்கு அணிகளாக இருப்பதற்கு காரணம் பாஜக. பாமகவில் பிரச்சனை போவதற்கும் பாஜக தான் காரணம்.

இதனை தொடர்ந்து பேசிய அவர்,

அதிமுக ஒன்றிணைந்தால் எடப்பாடி பழனிச்சாமி பாஜகவிற்காக நிற்கும் நிலை உருவாகும் எனவும்., தமிழகத்தில் இப்போது உள்ள சூழலில் மூன்றாவது அணி அமைவதற்கான வாய்ப்புகள் இல்லை எனவும் செல்வப்பெருந்தகை செய்தியாளார்கள் சந்திப்பில் தெரிவித்துள்ளார்.

காங்கிரஸ் பேரியக்கம் கட்சியை பலப்படுத்தும் பணியில் ஈடுபட்டு வருகிறது இந்தியாவினுடைய ஆன்மா கிராமம் தான் என்ற காந்தியின் நோக்கத்தை நோக்கி காங்கிரஸ் கட்சி சென்று கொண்டிருக்கிறது. எண்பது சதவீத கிராம கமிட்டிகள் காங்கிரஸ் கட்சியில் அமைக்கப்பட்டுள்ளது விரைவில் 100 சதவீதத்தை எட்டும் எந்த இடங்களில் காங்கிரஸ் இல்லை என சொன்னார்களோ தற்போது அங்கெல்லாம் காங்கிரஸ் கட்சியை உயிர்பித்து வருகிறது.

காங்கிரஸ் கட்சி கிராம வாரியாக அமைதிப் புரட்சியை மேற்கொண்டு காங்கிரஸ் கட்சியின் உறுப்பினர் சேர்க்கையை உயர்த்தியுள்ளது. காங்கிரஸ் கட்சியின் பிரம்மாண்டத்தை பொறுத்துக் கொள்ள முடியாமல் அண்ணாமலை போன்றோர் வாய்ச்சவடாவில் விட்டுக் கொண்டிருக்கிறார்கள் காங்கிரஸ் கட்சி மக்களால் ஏற்றுக் கொள்ளப்பட்ட மாபெரும் கட்சி புறக்கணிக்கப்பட்ட பாஜக இயக்கம் போன்றது கிடையாது.
தமிழகத்தில் பாஜக கால் ஊன்றுவதற்கான முயற்சியை மேற்கொள் வதால் பாஜக தலைவர்கள் தமிழகத்திற்கு படையெடுக்கிறார்கள். விரைவில் 2 லட்சம் கிராம கமிட்டி உறுப்பினர்கள் கலந்து கொள்ளும் மாநாடு திருச்சியில் ராகுல் காந்தி மல்லிகார்ஜுன கார்த்தி ஆகியோர் கலந்து கொள்ளும் வகையில் ஏற்பாடு செய்யப்படவுள்ளது.

காங்கிரஸ் கொண்டு வந்து ஜிஎஸ்டி வேறு பாஜக கொண்டு வந்துள்ள ஜிஎஸ்டி வேறு. பத்தாண்டுகள் ஜிஎஸ்டி வரிகள் மக்கள் வதைக்கப்பட்ட நிலையில் சேமிப்பு குறைந்து விட்டது தற்போது காங்கிரஸ் சொன்ன திட்டத்திற்கு அவர்கள் திரும்பி வருகிறார்கள். தமிழகத்திலும் வாக்காளர் பட்டியல் சீரமைக்கும் பணியை காங்கிரஸ் வரவேற்கிறது வாக்காளர் பட்டியலில் முறைகேடு இருப்பதை சரி செய்ய வேண்டும் என்பதுதான் காங்கிரஸ் கட்சி மூத்த தலைவர் ராகுல் காந்தி போராட்டம் நடத்தி வருகிறார்.

யார் ஒன்று சேர்ந்தாலும் இந்தியா கூட்டணிக்கு சவால் கிடையாது சந்தர்ப்பவாத சூழ்நிலைக்கு அவர்கள் அரசியல் செய்கிறார்கள். மக்களுக்காக அதிமுக ஒருங்கிணைந்து இருந்தால் எப்போதோ அதை செய்திருப்பார்கள். அதிமுக ஒருங்கிணைந்தால் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி அவர்களுக்காக காத்திருக்கும் நிலை உருவாகி இருக்கும்.

இப்போது எடப்பாடி பழனிச்சாமிக்காக காத்திருக்கும் நிலை மாறி அவர்களுக்காக காத்திருக்கும் நிலை உருவாகும் . எடப்பாடி பழனிச்சாமி ஒருங்கிணைப்பு விவகாரத்தில் தெளிவாக இருக்கிறார் அதற்கெல்லாம் வாய்ப்பே கிடையாது .இது அதிமுக உட்கட்சி விவகாரம் இது அவர்களுக்குள் அதை பேசி முடித்துக் கொள்வார்கள். இப்போதைய சூழலில் தமிழகத்தில் மூன்றாவது அணி அமைவதற்கான வாய்ப்பே கிடையாது என தெரிவித்தார்

RELATED ARTICLES

Recent News