கல்வி நிதியை ஒன்றிய பாஜக அரசு வழங்காததை கண்டித்து காங்கிரஸ் கட்சியினர் உண்ணாவிரத போராட்டம்..!!

தமிழகத்திற்கு வழங்க வேண்டிய கல்வி நிதியை ஒன்றிய பாஜக அரசு வழங்காததை கண்டித்து காங்கிரஸ் காட்சியினுடைய திருவள்ளூர் நாடாளுமன்ற உறுப்பினர் சசிகாந்த் செந்தில் கால வரையற்ற உண்ணாவிரதம் போராட்டத்தில் கடந்த மூன்று தினங்களாக ஈடுபட்டு வந்தார்.

குறிப்பாக ஒன்றிய பாஜக அரசு தமிழகத்திற்கு வழங்க வேண்டிய 2,152 கோடி நிதியை விடுவிக்கும் வரை தொடர்ந்து இந்த உண்ணாவிரதம் போராட்டத்தில் ஈடுபட போவதாக தெரிவித்த நிலையில் நேற்று இரவு ரத்த அழுத்தம் அதிகரித்ததின் காரணமாக உடல் நலம் பாதிக்கப்பட்டதை தொடர்ந்து 108 ஆம்புலன்ஸ் வாகனம் மூலமாக அழைத்து சென்று திருவள்ளூர் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த அவர் மேல் சிகிச்சைக்காக சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவ மனைக்கு 108 ஆம்புலன்ஸ் மூலமாக மருத்துவ கண்காணிப்புடன் அனுப்பி வைக்கப்பட்டு உள்ளார்.

தமிழகத்திற்கு வழங்க வேண்டிய கல்வி நிதியை ஒன்றிய பாஜக அரசு வழங்காததை கண்டித்து திருவள்ளூர் நாடாளுமன்ற உறுப்பினர் சசிகாந்த் செந்தில் உண்ணாவிரதம் போராட்டத்தில் ஈடுபட்டு திடீரென உடல் நலம் பாதிக்கப்பட்டு மருத்துவ மனையில் சேர்க்கப்பட்டு மேல் சிகிச்சைக்காக சென்னை அரசு மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

RELATED ARTICLES

Recent News