தமிழில் வெளியான தாம்தூம் படத்தின் மூலம் அறிமுகமானவர் நடிகை கங்கனா ரனாவத்.இவர் தற்போது இந்தியில் முன்னணி கதாநாயகியாக வலம் வருகிறார்.
நடிகை கங்கனா ரனாவத் ட்விட்டரில் தொடர்ந்து சர்ச்சைக்குரிய ட்வீட்களை பதிவிட்டதாக ட்விட்டர் நிர்வாகம் அவரது ட்விட்டர் கணக்கையே முடக்கி நடவடிக்கை எடுத்தது.

இந்நிலையில் கோயிலுக்கு வரும் இளம்பெண் அரைகுறை ஆடைகளோடு வருவது பற்றி காட்டமாக விமர்சனம் செய்துள்ளார். கோயிலுக்கு வரும் பெண்கள் நைட் கிளப்புக்கு செல்வது போல உடையணிந்து வருகிறார்கள் என்று சில புகைப்படங்களை இணைத்து ட்வீட் செய்திருந்தார்.
இரவு உடைகளைச் சாதாரணமாக அணியும் இவர்கள், சோம்பேறிகள் தவிர வேறில்லை. இத்தகைய முட்டாள்களுக்கு கடுமையான விதிகள் வகுக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.