மர்ம முறையில் கல்லூரி மாணவி உயிரிழப்பு..!! போலீஸ் விசாரணை தீவிரம்..!!

கோவை பிரபல பி.எஸ்.ஜி மருத்துவக் கல்லூரி கழிவறையில் மாணவி சடலமாக மீட்பு – காவல் துறையினர் விசாரணை..

கோவை பீளமேடு பகுதியில் உள்ள பிரபல பி.எஸ்.ஜி மருத்துவ கல்லூரி ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த கல்லூரியில் தமிழகத்தில் உள்ள பல்வேறு பகுதிகள் மற்றும் வெளிமாநிலங்களை சேர்ந்த மாணவ, மாணவியர்கள் இங்கு படித்து வருகின்றனர்.

இக்கல்லூரியில் நாமக்கல் மாவட்டத்தை சேர்ந்த பவபூரணி (வயது 28), எம்.பி.பி.எஸ். படித்து முடித்து விட்டு, மயக்கவியல் துறையில் முதுகலை படித்து வந்துள்ளார். இதற்காக அவர் அந்த கல்லூரி விடுதியில் தங்கி படித்து வந்ததாக சொல்லப்படுகிறது.

இந்நிலையில் அந்த மாணவி விடுதி வளாகத்தில் உள்ள கழிவறைக்கு சென்றார். நீண்ட நேரம் ஆகியும் அவர் வெளியே வரவில்லை. இதனால் அவருடைய அறையில் தங்கி இருந்த மாணவிகள் கழிவறைக்கு சென்று கதவை தட்டினர்.

பலமுறை தட்டியும் கதவை திறக்கவில்லை. இதனால் சந்தேகம் அடைந்த மாணவிகள், கல்லூரி நிர்வாகத்துக்கு தகவல் தெரிவித்தனர். உடனே அவர்கள் அங்கு விரைந்து சென்று கழிவறை கதவை உடைத்து பார்த்த போது அங்கு அந்த மாணவி பிணமாக கிடந்தார்.

இது குறித்து தகவல் அறிந்த பீளமேடு காவல் துறையினர் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று மாணவியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அத்துடன் அவர்கள் இது குறித்து வழக்குப் பதிவு செய்து மாணவி எப்படி உயிரிழந்தார்..? கொலையா அல்லது தற்கொலையா என்ற பல்வேறு கோணங்களில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்..

RELATED ARTICLES

Recent News