திருப்பூர் கருவம்பாளையம் பகுதியில் தனியாருக்கு சொந்தமான குடோனில் தீ விபத்து. பல லட்சம் மதிப்பிலான துணிகள் மற்றும் மருந்துகள் எரிந்து சேதம்.
திருப்பூர் கருவம்பாளையம் டைமண்ட் லேஅவுட் பகுதியில் தனியாருக்கு சொந்தமான குடோன் செயல்பட்டு வருகிறது இதில் முதல் தளத்தில் நொய்யல் பார்மா டிஸ்ட்ரிபியூட்டர்ஸ் என்ற பெயரில் மருந்து கம்பெனி செயல்பட்டு வருகிறது.
தரைத்தளத்தில் காதர் பேட்டையில் பனியன் வியாபாரம் செய்து ஆனந்த் என்பவர் தனது கோடிக்கணக்கான மதிப்பிலான ஆடைகளை இந்த குடோனில் விற்பனைக்காக வைத்துள்ளார். இந்த நிலையில் இந்தப் பகுதியில் இன்று காலை முதல் மின்மினியின் விநியோகம் தடை பட்டிருந்த காரணத்தால், மேல் தளத்தில் உள்ள மருந்து கம்பெனியின் உபயோகத்திற்காக ஜெனரேட்டரை இயக்கியுள்ளனர்.
காலை முதல் நீண்ட நேரம் ஜெனரேட்டர் இயக்கப்பட்டதால், ஜெனரேட்டர் சூடாகி அதிலிருந்து தீ பற்றியது. ஜெனரேட்டர் அருகிலேயே மருந்து சம்பந்தமான பொருட்கள் அடுக்கி வைக்கப்பட்டு இருந்ததால் அதில் தீ மலமலவன பரவி அருகில் இருந்த துணிகள் அடுக்கி வைக்கப்பட்டிருந்த குடோனுக்குள் தீ பரவியது.
130 அடி நீளம் கொண்ட குடோனில் முழுவதும் பணிய துணிகள் அடுக்கி வைக்கப்பட்டிருந்ததால் தி மளமளவென பரவியது. இதையடுத்து உடனடியாக குடோனில் இருந்தவர்கள் வெளியேறியதுடன் திருப்பூர் தெற்கு தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்.
சம்பவ இடத்திற்கு இரண்டு தீயணைப்பு வாகனங்களில் வந்த தீனைப்புத் துறையினர் 10க்கும் மேற்பட்டோர் சுமார் ஒரு மணி நேர போராட்டத்திற்கு பிறகு தீயை முற்றிலுமாக அணைத்தனர். குடோனில் கோடிக்கணக்கான மதிப்பில் பனியன் துணிகள் அடுக்க வைக்கப்பட்டிருப்பதால் சேத மதிப்பு என்ன என்பது முழுமையாக தெரியவில்லை. இந்த தீ விபத்து காரணமாக அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.