நடிகரும் துக்ளக் ஆசிரியருமான ‘சோ’ ராமசாமி’ கடந்த 2016ம் ஆண்டு காலமானார். இந்நிலையில் சோ ராமசாமியின் மனைவி சௌந்தரா ராமசாமி (வயது 84) காலமானார்.
உடல்நலக் குறைவு மற்றும் முதுமை காரணமாக நேற்றிரவு (ஆக. 19) சௌந்தரா ராமசாமி காலமானதாகக் குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.
சௌந்தரா ராமசாமியின் இறுதிச் சடங்குகள் நாளை நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.