சென்னை மயிலாப்பூர் பகுதியில் கடந்த 10 ஆம் தேதி 9 வயது சிறுமிக்கும் 15 வயது சிறுவனுக்கும் அவர்களின் பெற்றோர்கள் ‘குழந்தை திருமணம்’ செய்து வைத்ததுள்ளதாக சமூக நல அலுவலர் ஹரிதா என்பவருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
இதனை கேட்டு அதிர்ச்சி அடைந்த ஹரிதா, உடனடியாக சம்பவ இடத்திற்கு சென்று பாதிக்கப்பட்ட சிறார்களிடம் விசாரணை நடத்தினர். இரு வீட்டார் சம்மதத்துடன் இந்த திருமணம் நடைபெற்றதாக விசாரணையில் தெரிய வந்தது.
இதனையடுத்து ஹரிதா காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பெயரில் போலீசார் விரைந்து சென்று விசாரணை நடத்தி சிறுமி மற்றும் சிறுவனை மீட்டு கெல்லீஸ்சில் உள்ள சிறார் காப்பகத்தில் ஒப்படைத்தனர்.
இதையடுத்து சிறுமியின் தாய், தந்தை, மற்றும் சிறுவனின் தந்தை ஆகியோர் மீது குழந்தை திருமண தடைச் சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.