கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை மகப்பேறு சிகிச்சை பிரிவில் சரவணன் திவ்யா தம்பதியினருக்கு கடந்த நான்கு நாட்களுக்கு முன்னர் ஆண் குழந்தை பிறந்துள்ளது.
இந்நிலையில் மருத்துவமனையில் உள்ள திவ்யாவுடன் அவரது மாமியார் தங்கம்மா என்பவர் உடன் இருந்த நிலையில், நேற்று அங்கு சுற்றித்திரிந்த பெண் ஒருவர் தங்கம்மாவிடம் சென்று குழந்தை குறித்து விசாரித்துள்ளார்.
பின்னர் அவரது பக்கத்திலேயே உறங்கியும் உள்ளார். திடீரென அதிகாலை 3 மணியளவில் அக்குழந்தையை அந்தப் பெண் கடத்திக்கொண்டு அங்கிருந்து ஓடியுள்ளார். இதனை கண்ட தங்கம்மா., குழந்தை குழந்தை எனக் கூச்சலிட அருகில் இருந்த பொதுமக்கள் மற்றும் மருத்துவமனை துப்புரவு பணியாளர்கள் அந்த பெண்ணை கையும் களவுமாக பிடித்துள்ளனர்.
பின்னர் குழந்தையை கைப்பற்றி பெற்றோரிடம் ஒப்படைத்து அங்கிருந்த பொதுமக்கள் ஒன்று சேர்ந்து தர்ம அடி கொடுத்துள்ளனர். தகவலின் பேரில் அங்கு வந்த காவல்துறையினர் அப்பெண்ணை காவல் நிலையம் அழைத்து சென்று விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்த தகவலை அறிந்த அப்பெண்ணின் உறவினர்கள்., அப்பெண்ணை கைது செய்வதோடு மட்டுமின்றி குழந்தை கடத்தலில் ஈடுபடுவர்களை கைது செய்ய வலியுறுத்தி கள்ளக்குறிச்சி அரசு மகப்பேறு மருத்துவமனை முன்பு சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என காவல் ஆய்வாளர் ராபின்சன் பேச்சுவார்த்தை நடத்தி பின்னரே அவர்கள் சாலை மறியல் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர். இந்த சம்பவம் சக மகேப்பேறு பெண்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது..