இயக்குநர் மாரி செல்வராஜ் இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின் நடிப்பில் இன்று வெளியான படம் மாமன்னன். இந்த படத்தை பார்த்த ரசிகர்களும் சினிமா ஆர்வலர்களும் தங்களது கருத்தை இணையத்தில் பதிவு செய்து வருகின்றனர்.
இந்நிலையில் மாரி செல்வராஜ் ட்வீட் ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் மாமன்னன் படத்தை பார்த்து விட்டு தன்னை கட்டிப்பிடித்து பாராட்டியதாக கூறியுள்ளார்.
மேலும் படத்தை பார்த்த முதலமைச்சருக்கு நன்றி என்றும் அவர் தெரிவித்துள்ளார்.