தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடந்த சில மாதங்களாக மாவட்டம் தோறும் களஆய்வு மேற்கொண்டு வருகிறார்.. அதன் ஒரு பகுதியாக தற்போது தஞ்சை மாவட்டத்தில் களஆய்வு மேற்கொண்டுள்ளார். அப்போது மக்கள் பயன்பாட்டிற்காகவும்., குறைந்த விலையில் மக்களுக்கு மருந்து வழங்க வேண்டும் என்ற நோக்கில் திறக்கப்பட்டுள்ள முதல்வர் மருந்தகத்தை நேரில் சென்று பார்வையிட்டார்.
பின்னர் அங்கு பணிபுரியும் ஊழியர்களிடம் மருந்துகளின் தரம் குறித்தும்., மக்களின் வருகை குறித்தும் கேட்டறிந்தார். இதனை தொடர்ந்து மக்களிடம் முகம் சுளிக்காமல் நடந்துகொள்ள வேண்டுமெனவும்., மருந்துகள் இருப்பு குறையும் முன்னே அவற்றை ஆர்டர் செய்து வைத்து விநியோகம் செய்ய வேண்டுமென அறிவுறுத்தினார்..